வியாழன், 20 செப்டம்பர், 2012

மதுக்குடித்தால் ஈரலைப் பாதிக்கும்.எப்படி? படியுங்கள்.


    நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மிக முக்கியமானதாகும். அவைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே சிறப்பாக செயல்பட்டு தன் வேலையை செம்மையாக செய்துகொண்டிருக்கிறது.

    அதில் ஈரலின் பணியைப் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள். தெரிந்து கொண்டால் நிச்சயம் திருந்திகொள்ள முடியும் அல்லவா? சரி இப்பொழுது தெரிந்துக்கொள்ள படியுங்கள். உடலுக்கு நோய் ஏற்பட்டால் அதிலிருந்து விடுபட அதற்குரிய மருந்தை உட்கொள்கிறோம். நாம் உடலுக்காக உட்கொள்ளும் எல்லா மருந்துகளும் ஈரலில் நின்றுதான் செயல்படுகின்றன. இத்தகைய அரும்பணியாற்றும் ஈரலைத்தான் குறிவைத்து முடக்குகிறது நீங்கள் குடிக்கும் மது. அதனால் எந்த மருந்தும் வேலை செய்யாதபடி செயல்திறனை இழந்து விடுகிறது நம் ஈரல்.

    நோய்க்கு தீர்வு நோய்க்குரிய மருந்துதானே! மருந்தைத் தாங்கிக்கொண்டு செயல்படவேண்டிய ஈரலே தன் செயல்திறனை இழந்தால் நீங்கள் உட்கொள்ளும் மருந்து வேலை செய்யுமா? நிச்சயம் வேலை செய்யாது. உட்கொண்ட மருந்து வேலை செய்யவில்லையென்றால் நோய் எப்படி தீரும்? தீராது. பிறகு நோய் முற்றிவிடும். பிறகு நடப்பது என்ன என்பது உங்களுக்குத் தெரியும் தானே? இப்படி உயிரைக் குடிக்கும் மதுப்பழக்கம் தேவையா என்பதை சிந்தித்துப் பாருங்கள். இனி அந்தப்பழக்கம் வேண்டாமென்று ஒதுக்கி வாழுங்கள். அது உங்களுக்கும் நல்லது. உங்களையே நம்பியிருக்கும் குடும்பத்தாருக்கும் மிக நன்மைதானே? சரி இனி மதுக்குடிக்காமல் வாழ்வீர்கள் அல்லவா? மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக