திங்கள், 3 செப்டம்பர், 2012

புகையிலை உற்பத்தியை தடை செய்ய வேண்டும்

புகையிலை உற்பத்தியை தடை செய்ய வேண்டும்‚
ஏன்? படியுங்கள்.


     நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க தடை அறிவித்துள்ளது. பொருட்களை உற்பத்தி செய்வதை தடை செய்து விடுவது மிக நன்மையாக முடியும். இதை ஒரு சமுதாய கடமையாக கருதி மக்களே முன்வந்து செய்ய வேண்டும். இது போல  18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை விற்பனை செய்ய தடையும் இருக்கிறது. அது தொடர்ந்து இருந்தால் சமுதாயத்தில் இளைஞர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

சமுதாயத்தை சீர்திருத்த நமக்கு கிடைத்த நல் வாய்ப்பாக கருதி நாம் செயலாற்ற வேண்டும். புகையிலைப்பொருட்களால் ஏற்படும் கெடுதலை பிஞ்சு நெஞ்சங்களிலே  விதைக்க வேண்டும். புகைப்பதால் ஏற்படும் தீமைகளை அவர்களுக்கு எடுத்துரைத்தும், புகையிலை மீது பற்று வைத்தால் புற்று நோய் வந்துவிடும் என்பதையும் பள்ளி பாட திட்டங்களில் சேர்ப்பதால் மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். புகைபழக்கம் இல்லா நாட்டை உருவாக்கும் விரும்புபவர்களின் சீரிய  சிந்தனையாகும்.

    நானும் உங்களிடம் ஒரு சில தகவல்களை பகிர்ந்துள்ளேன். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு நல்குவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக