புற்று நோய் உடலில் உடலுக்குள், சிதைந்த ஒரு திசு. இது தன்னைச் சுற்றி தன் அசுர வளர்ச்சியை காலிபிளவர் போல் பெருகிடச் செய்யும். இது பரம்பரையாக பெற்றோர் எவருக்கேனும் இருந்தால் அவர்கள் பிள்ளைகளுக்கு 7 சதவீதம் வரும் மற்றவர்கள் கட்டாயம் தங்களை சோதித்துக் கொள்ள வேண்டும்.
புற்றுநோய் மரபுகளாக மற்றவருக்கு வரக்காரணம் சுற்றுசூழல்தான். சிகரெட் புகைக்கும் நூற்றில் 40 பேருக்கு புற்றுநோய் வரும். மீதமுள்ள 60 பேருக்கு கட்டாயம் இதயம், நுரையீரல் நோய் வரும். நம் பழக்கத்தில் இல்லாத புதிய வகையான பான்மசாலா, பான்பராக், குட்கா, புகையிலை தூள், மூக்குபொடி என புகையிலை சார்ந்த அத்தனையும் புற்று நோயின் நண்பன். அதைப்போலவே அசைவ உணவில் சுவைக்காக சேர்க்கப்படும் காரமசலா பொருட்கள் குடல் அழற்சி, குடல் புண் வரக்காரணம் இந்த குடல் புண்களின் திசு ஏதெனும் சிதைந்து அதனைச் சுற்றி இதர எல்லா திசுவும் இத்துடன் சேரத் தொடங்கினால் புற்றுகட்டியாக மாறும். எனவே அசைவத்தில் அளவும் அன்றாடம் உண்பதை தவிர்ப்பதும் இன்றைய நிலைக்கு நல்லது. தொடர்ந்து இருமல் வியர்ப்பது கட்டி ஆறாத புண், ரத்தக்கழிவு, மலத்தில் ரத்தம் தவறும் மாதவிடாய் போன்ற பலவும் இந்த நோயின் அறிகுறிகள். இதனை முறிப்படி உடனடியாக சோதித்து உரிய சிகிச்சை மேற்கொள்வது நல்லது. எனினும் தற்போது தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் புற்றுநோயாளிகள் எண்ணிக்கை அபாயகரமாகக் கூடி வருகிறது. புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையை குறைத்து முற்றிலுமாக ஒழிக்கவேண்டுமென்றால் மேற்கண்ட எந்த தீய பழக்கத்திற்கும் இலக்காகாமல் வாழ்ந்தாலே போதும். புற்றுநோய் என்பது இனி மனித வாழ்வில் காணமல் போகும். காணாமல் போகும்படி வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக