திங்கள், 3 செப்டம்பர், 2012

வளர் இளம் பருவத்தினரின் வாழ்க்கையை பாதுகாக்க வேண்டும்.

    இன்றைய இளைஞர்களிடம் புகைபிடிக்கும் பழக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதில் 13, 14 வயது வளர் இளம்பருவத்தினரும் அடக்கம். இவர்கள் புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளைப் பற்றி அறியாமல் அதில் சிக்கிக்கொள்கின்றனர். காலப்போக்கில் உடல்நலம் கெட்ட பின்னரே அதிலிருந்து மீளவேண்டும் என்று துடிக்கின்றனர். எதுவாக இருந்தாலும் சரி கண்கெட்ட பின் சூரிய வணக்கம் செலுத்துவதில் என்ன பயன்? இத்தகையவர்கள் எப்படி இதில் சிக்கிக்கொள்கிறார்கள் என்று பார்த்ததில் தாம் வயதில் பெரியவர்கள் ஆவிட்டதைக் காட்டும் அடையாளமாகவும், தற்பெருமைக்காகவும், தீய நண்பர்களின் தூண்டுதலின் பேரிலும், இத்தீய பழக்கத்திற்கு இரையாகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இச்செயலால் பெற்றோர்களின் நம்பிக்கையும், கனவுகளுக்கும் டாட்டா காட்டி விடுகின்றனர். மேலும், பெற்றோர்கள் தன் மகன் சிறுவன்தானே என்று அலட்சியமாக இருந்துவிடுகின்றனர்.  என் மகன் எந்த தீய செயலிலும் ஈடுபடமாட்டான் என்ற நம்பிக்கையின் பேரிலும் இருந்து விடுகின்றனர்.

     பள்ளிக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளை பின் தொடர்ந்துதான் கண்காணிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவன் நேரத்திற்கு வீட்டிற்கு வருகிறானா? அப்படி வரவில்லையென்றால் அதற்கு என்ன காரணம் என்பதைப்பற்றியெல்லாம் கேட்கலாம் அல்லது கண்காணிக்கலாம். மேலும் அவனது நண்பர்கள் வட்டத்தையும் கவனிக்க வேண்டும். அவர்கள் பள்ளி மாணவர்களாக அல்லது வேறு நண்பர்களா? அதில் அவர்கள் எத்தகையவர்கள் என்பதையும் அறிய வேண்டும். இதில் அலட்சியமாக இருந்துவிட்டால் பின் வருந்திப்பயன் ஏதும் இல்லை. இது இக்காலத்தின் சூழ்நிலையாகும். அதனால் உங்கள் பொன்னான நேரத்தை கொஞ்சம் அவனுக்கும் கண்காணிப்பதற்காக செலவு செய்தால் அது உங்களுக்கும் நல்லது. ஏன் இந்த சமுதாயத்திற்கும் நல்லதுதானே? எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டால் போதும் என்று இருந்துவிடாதீர்கள். அவர்கள் மீது கண்காணிப்பு அவசியம் தேவை என்பதை அறிந்துக்கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அதனால் அவதியும் படாதீர்கள் என அறிவுறுத்தும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக