புதன், 19 செப்டம்பர், 2012

ஆணின் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணங்கள்

    மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு பலவிதமான காரணங்கள் இருந்தாலும் அவற்றில் இரண்டு முக்கிய காரணங்கள் நம்மால்தான் ஏற்படுகிறது.

1. போதைப் பொருள் பயன்படுத்துவது.
2. நோய்களுக்குக் கொடுக்கப்படும் மருந்துகள்.

போதைப் பொருட்களால் ஏற்படும் மலட்டுத் தன்மைகள்:-

     போதைப் பொருளுக்கு பலமோசமான குணங்கள் இருக்கின்றன. அவற்றுள் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் குணமும் ஒன்று.  அளவுக்கு அதிகமாகக் குடித்திருக்கும் ஓர் குடிகாரனாலோ அல்லது போதை மருந்தை உபயோகித்து மிகுந்த போதையில் இருக்கும் ஒருவனாலோ, ஓர் ஆண்மகனாக நடந்துக் கொள்ள முடியாது. தொடர்ந்து போதை மருந்துக்களை உபயோகித்தால் குழந்தைபாக்கியம் என்பது கேள்விக்குறியாகிவிடும்..  
    போதைப்பொருளை ஏற்றுக்கொண்டால் நல்ல சிற்றின்பத்தில் ஈடுபடலாம் என்பார்கள் ஆனால் அதில் எந்தவித உண்மையும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மீறி நடந்தீர்களானால் ஆண்மகனாக நடந்துக் கொள்வதற்குரிய உறுதியை இழந்துவிடுவீர்கள். இது தவிர கல்லீரலின் கட்டுப்பாட்டையும் குலைத்து, பெண்களின் ஹார்மோன் என அழைக்கப்படும் ஈஸ்ட்ரோஜன் அளவையும் இரத்தத்தில் அதிகப்படுத்துகிறது. இதன் காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விடுகின்றது.
  போதை மருந்துகளோ ஏகப்பட்ட பின் விளைவுகளை உண்டாக்கி, விந்தணுக்களை முறையாக வளர விடாமல், தடுத்து விடுகிறது, இதுதவிர, விரைகளின் இயக்கத்தையும், ஹார்மோன்களின் கட்டுப்பாட்டையும் சிதைத்து விடுகிறது. இதன் காரணமாக ஆண்குறி விரைக்கும் தன்மை குறைந்து ஆண்மையை இழந்து விட செய்து விடுகிறது.
     இந்த நிலைக்குத் தள்ளப்படுவது எதனால்? போதைப் பொருள்களை பயன்படுத்துவதனால்தானே! இனியும் தேவையா? இந்த போதைப் பொருள்கள். போதைப் பொருள்களை பயன்படுத்தாதீர்கள். அதனால் உடல்நலத்தீங்குதான் ஏற்படுகிறது என்பதை தெரிந்துக்கொண்ட நீங்கள் விட்டுவிட்டு வாழ்வீர்கள் அல்லவா? நிச்சயம் மாற்றிக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக