திங்கள், 3 செப்டம்பர், 2012

போதைப்பொருள் கடத்தலும், ஐ.நா.சபை எடுத்த


போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் உடல், மனநல கோளாறுகளை பற்றியும் பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை புகைப்படங்களுடன் கூடிய விளக்கத்துடன் தொகுத்து வழங்குவது உங்களுக்காக.

போதைப்பொருள் கடத்தலும், ஐ.நா.சபை எடுத்த நடவடிக்கைக்கு
கிடைத்த நற்பலன்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

    ஐ.நா.சபை போதைப்பொருள் பழக்கம் மற்றும் விற்பனையைத் தடுக்க பலமுயற்சிகளை எடுத்துக் கொண்டது. ஐக்கியநாடுகள் குழு குறித்து நடத்திய கூட்டத்திற்கு இந்தியா தலைமை வகித்தது. அப்போது போதைப் பொருள் சம்பந்தப்பட்ட சட்டங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி இரண்டாம் முறையாக ஒருவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கும்படி சட்டம் கடுமையாக்கப்பட்டது. இந்த முடிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்புச்சட்டத்திலேயே வரலாற்றுச் சிறப்புமிக்கது ஆகும்.

    மும்பை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 350கிலோகிராம் ஹெராயின்தான், உலக அளவிலேயே அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளாகும் என்று சர்வதேச புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.


   போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டவர்களை விசாரிப்பதற்கென்றே விசேஷ கோர்ட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. போதை மருந்து தடுப்பு அதிகாரிகளுக்கான சிறப்புப் பயிற்சிகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அளிக்கப்படுகின்றன.


    இதைத் தடுக்கவும் அரசு பெரும் முயற்சிகளைச் செய்து வருகிறது. மேலும் நாட்டின் எல்லைப் புறங்களில் நடைபெறும் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்துதலின் சம்பந்தப்பட்டிருப்பவர்களை அல்லது சந்தேகப்படுபவர்களை அரசாங்கம் தன் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகமும் இது சம்பந்தமான விஷயங்களில் உள் விவகாரத்துறையுடன் இணைந்து இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளில் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைபொருள்  கடத்துவதை தடுப்பதற்கு திடமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோள்.  தடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக