சனி, 8 செப்டம்பர், 2012

பெற்றோர் கவனத்திற்கு... குழந்தைகளிடம் அன்பாக இருங்கள்.


உங்கள் குழந்தைகளிடம் அன்பாக பேசி அவர்களின் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஏதேனும் பிரச்சனைகளில் அவர்கள் சிக்கியிருக்கின்றார்கள் என்பது தெரியவரும். அப்படி தெரியவந்தால் அப்பிரச்சனைக்க்கு உடனடியாக தீர்வு காண முயலுங்கள்.

உங்கள் குழந்தையின் எண்ணங்களைப் புரிந்துக் கொள்ளுங்கள். எதனை செய்ய அவர்கள் விரும்புகிறார்கள் என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆராய்ந்து தீர்வு காண முயலுங்கள். உங்களது பிள்ளையை யார் யாரெல்லாம் பார்க்க வருகிறார்கள். அவர்களின் நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி கவனித்து வைத்துக்கொள்வது நல்லது. நீங்கள் அவர்களை கவனிப்பது அவர்களுக்கு தெரியாமல் இருப்பது மிக நல்லது. உங்கள் பிள்ளைகளுக்கும் கூடத்தான். அவர்கள் கூடுவது தவறான செயல்களுக்குத்தான் என்று தெரிந்தால் அதை மென்மையாக எடுத்துரைத்துவிட வேண்டுமே தவிர வன்மையாக செயல்படக்கூடாது. பலர்முன் தவறான செயல்களைப் பற்றி திட்டவும் கூடாது. அதுவும் வயது வந்த பிள்ளையாக இருந்தால் நாலுபேர் முன்னிலையில் கடிந்து கொள்வதே கூடாது.

அதனால் உங்களுக்கு எந்தப் பயனும், அதாவது எதிர்பார்த்த பலன் கிடைக்காது. ஆகவே எதைச் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்களோ அதனை நாசுக்காகச் சொல்ல வேண்டும். அதில் அவர்கள் மனம் புண்படும். அதனால் அவர்கள் தங்கள் பெற்றோர் தாம் செய்யும் தவறினால் எவ்வளவு தூரம் மனது புண்படுகிறார் என்று பிள்ளைகள் உணருவார்கள். அத்தகைய சூழ்நிலையை உருவாக்கி அதன்மூலம் தீர்வு காண முயலுங்கள்.

வீட்டில் உள்ள மருந்துகள் எல்லாமும் கண்காணிப்பாக வைத்திருங்கள். அடிக்கடி யாருக்கும் தெரியாமல் அதனைச் சரி செய்து பாருங்கள். உங்கள் மகன் உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பவனாக இருந்தால் அவனது உடமைகளில் அல்லது படுக்கை அறையில் சிரிஞ்ச் போன்ற பொருள் ஏதேனும் தென்படுகிறா என்பதைக் கண்காணியுங்கள்.

நீங்களே மதுவோ, போதை மருந்தோ அருந்தாமல் ஒரு முன் உதாரணமாக வாழ்ந்து காட்டுங்கள். இவைகள் எல்லாம் பெற்றோர் கவனிக்க வேண்டியவைகள் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக