திங்கள், 3 செப்டம்பர், 2012

புகை பிடிக்கும் பழக்கம்

உங்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளதா! ஆம் என்றால்,
உடனே அந்த பழக்கத்தை விட்டுவிடுவது நல்லது.
ஏன் ? படியுங்கள்!

        புகைப்பழக்கத்தால் உங்களுக்கு   எந்த ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. அது உடல் நலத்திற்கு தீங்கைதான் விளைவிக்கிறது. அது ஆண்மை தன்மைக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டு பண்ணிவிடுகிறது. புகையிலையில் உள்ள நிகோடின் விந்தணுக்களின் நீந்தும் தன்மையை இழந்து விடுகிறது.

    இது ஒருபுறம் என்றால்  மற்றொருபுறம் நிகோடின் விரைகளுக்கு இரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் ஓர் பிடித்தத்தை ஏற்படுத்தி இரத்தத்தின் அளவையும் குறைத்து, விந்தணுக்களின் உற்பத்தியை பாதிக்க செய்துவிடுகிறது. மேலும் இரத்தத்தில் புரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவையையும் அதிகப்படுத்துகிறது. நாளாக நாளாக உடலுறவு ஆர்வமும் குறைந்து வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டும் விடுகிறது. அதனால் சமுதாய சீர்கேடு பிரச்சனைகளும் தோன்றிவிடுகின்றன.

     இதையெல்லாம் தவிர்த்து சிறப்புடன் வாழ வேண்டுமானால் புகைபிடிக்கும் பழக்கத்தை அடியோடு விட்டுவிடுங்கள். அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் ஒரு நல்ல அர்த்தத்தையும் கொடுக்கும்.

இனி புகைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக