சாதாரண மனிதரா? போதை மனிதரா?
எப்படி தெரிந்துக்கொள்வது, அறிகுறிகள் எவைகள்,
என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்பழக்கத்தில் உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். எப்படி? படியுங்கள்.
1. விளையாட்டுகளிலும், அன்றாட வேலைகளிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பார்கள்.
2. சரியாக சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக எடை குறைந்து மெல்லிய தேகத்துடன் இருப்பார்கள்.
3. அதிக கைகால் நடுக்கத்துடனும், தள்ளாடிய நடையும், தடுமாறிய நிலையிலேயே இருப்பார்கள்.
4. உடைகளில் ரத்தக்கறைகள் காணப்படும்.
5. கண்கள் சிவந்த நிலையிலும், வீங்கியும், பார்வை திறன் மங்கியும், பேசும்போது குளறிக்குளறிப் பேசுவார்கள்.
6. புதிதாக நிறைய ஊசி போட்ட தழும்புகள் காணப்படும். இதன் காரணமாகவே உடைகளில் ரத்தக்கறைகள் படிந்திருக்கும்.
7. வீட்டில் ஊசிகள், சிரிஞ்சுகள், வினோதமான பலவகைப் பொட்டலங்கள் நிறைய இருக்கும்.
8. குமட்டல், வாந்தி, வலி ஏற்பட்ட நிலையில் இருப்பர்.
9. எந்த நேரமும் தூங்கிக்கொண்டு இருப்பர். அல்லது தூக்கமேயின்றி சுற்றிக்கொண்டிருப்பர்.
10. தீவிரமான பரபரப்பு காட்டுதல், இல்லையென்றால் சோர்ந்து போய் இருத்தல், நிறைய வியர்த்துக்கொட்டுதல், மனநிலை அடி க்கடி மாறுதலுடன் காணப்படுவார்கள்.
11. எதிலும் பற்றற்று இருத்தல், அக்கரையில்லாமலும் இருப்பார்கள்.
12. கோபத்தில் அடிக்கடி கொதிக்கும் நிலை உண்டாதல்.
13. நிறைய ஞாபக மறதியுடன், கவனக்குறைவுடனும் இருப்பார்கள்.
14. தனிமையுடன் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக கழிவறையில் நீண்ட நேரம் இருப்பார்கள்.
15. வீட்டிலிருந்து சிறு சிறு பொருட்களும், பணமும் காணாமல் போதல்.
ஒருவரிடம் இத்தகைய அறிகுறிகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து தெரிந்தால் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்தான் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். போதைப்பழக்கத்தால் மனிதனின் நிலை எப்படி எல்லாம் தடம்மாறி விடுகிறது பார்த்தீர்களா? போதைப்பழக்கத்தை தவிர்த்து வாழ்வதுதான் நல்லது. இந்த தீய பழக்கத்தை மறந்து வாழ்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக