சனி, 13 அக்டோபர், 2012

புகையிலை பொருட்களில் எத்தகைய நச்சுப் பொருட்கள் உள்ளன என்பது உங்களுக்கு தெர்யுமா ?


1.  நீங்கள் தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா?
அதில் உள்ள நச்சுத்தன்மைப் பற்றி தெரியாமல் புகைத்துகொண்டு இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம். தொடர்ந்து நீங்கள் புகைப்பிடிப்பதற்கான முக்கிய காரணம் எது தெரியுமா? அது நிக்கோடீன் என்ற நச்சுப்பொருள்தான். நிக்கோட்டினில் ஆல்கஹாலை விட அதிக கெடுதல் செய்யும் நச்சு உள்ளது.

2. நீங்கள் மென்று சாப்பிடுகிற புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் அதில் மூவாயிரம் வகையான நச்சுக்கிருமிகள் இருக்கிறது.

3. நீங்கள் சிகரெட்டை பற்ற வைத்தவுடன் அதிலிருந்து வெளிப்படுவது இன்னும் கூடுதலான நச்சுகள், அதனால் உடல் நலக்கேடுகள் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இப்படி எண்ணிலடங்கா நச்சுக்கிருமிகள் இருப்பதை அறியாமலேயே இவ்வளவு காலம் இருந்துவிட்டீர்கள். இப்போது அறிந்துகொண்டீர்கள் அல்லவா? சரி இனிவரும் காலங்களில் இத்தகைய தீய பழக்கத்தை விட்டுவிலிஹீ;யீs;. அது உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் நல்லது.  ஏன் இந்த சமுதாயத்திற்கும் நன்மைதானே. தெரிந்துக்கொண்ட நீங்கள் இனி புகைப்பிக்க மாட்டீh;கள் என்ற நம்பிக்கையுடன்...

கர்ப்ப காலத்தில் மது குடிப்பதால்

கர்ப்ப காலத்தில் மது குடிப்பதால், தாயின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, வாriசுகளின் எதிh;காலத்தையும் சூன்யமாக்கிவிடும்.

    ஆரோக்கிய மனிதா; மது குடித்தாh; கூட, முதலில் நரம்பு மண்டலத்தில் தான் தா;கத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

    தொப்புள்கொடி வழியாக குழந்தையின் உடலுக்குள் ஊடுருவும் ஆல்கஹால், முதலில் நரம்பு மண்டலத்தைதான் பதம் பாh;;க்கிறது. நரம்பு மண்டலம் பாதிக்கும் போது, உடல் hpதியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு குழந்தையின் குணாதிசயங்களும் முற்றிலுமாக மாறுபடுகிறது. குழந்தை மூh;க்கனாக, மூடனாக பிறக்கும் வாய்ப்புள்ளது.

    நமது குணாதிசயங்கள் கருவிலேயே தீh;மானிக்கப்படுவதால், கா;ப்ப பையில் மதுவை ருசிக்கும் குழந்தையின் பழக்க, வழக்கங்கள் முற்றிலுமாக மாறிவிடும் ஆபத்து உள்ளது.

மூளையில் தொடங்கி...

மூளையில் தொடங்கி, குழந்தையின் கபாலம், கண், இதயம், தண்டுவடம் உட்பட எந்த உறுப்பையும் மதுவிட்டு வைக்காது என்பது, ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அறிவுத் திறன் மிக குறைவாக இருக்கும்.

    இதனால் கல்வியில் அதிகம் கவனம் செலுத்த முடியாது.

இதயத்தில் பிறவிக் குறைபாடுகளை ஏற்படுத்தும், குறைந்த எடை அல்லது அதிக எடையுடன் பிறக்கும். கண் சிறுத்து போகும்.

    மதுவினால் ஏற்படும் பாதிப்பு குழந்தை பருவத்தோடு நின்றுவிடுவதில்லை, உயிர்பிhpயும் வரை உடனிருந்து தொல்லை கொடுக்கும்.

    இது தவிர, மதுக் குடிப்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வர வாய்ப்பு அதிகம். உயர் ரத்த அழுத்தம் இருந்தால், பிரசவ கால சிக்கல் ஏற்படும்.

    எனவே, எப்போதும் மது நல்லதல்ல. அதுவும் கர்ப்பத்தின் போது, ஒரு தளி மதுவும் குழந்தைக்கு ஆபத்தானது என்பதை உணர்ந்து, பெண்கள் மதுவுக்கு விடை கொடுப்பது நல்லது.

ர்ப்பத்தின் போது மது குடிப்பதால் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்

தலை அளவு சிறுத்திருத்தல்
பிறவி இதயக் குறைபாடுகள்
சிறுநீரகங்களில் குறைபாடு
சராசாp உயரத்தை விட குறைந்த உயரம்
குறைந்த எடை
பார்வை திறன் மங்குதல்
செவித் திறன் குறைபாடு
புத்தி மந்தம்
மற்றவருடன் அனுசாpத்து செல்லாமை
மூர்க்கதனம், முரட்டுதனம்
ஞாபகத் திறன் குறைவு
படிப்பில் கவனக் குறைவு
கற்றலில் குறைபாடு
பேச்சுத் திறன், மொழித் திறன் குறைவு

அளவோடு குடிப்பது நல்லதா

மதுவை அளவோடு குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்ற வாதத்தில் சிறுதும் உண்மை இல்லை. 15 மி.லி., வரை ஆல்கஹாலை உடல் ஏற்கும் என்பது உண்மை தான்.

    ஆனால், போதைக்காக குடிப்பவா;கள், 15 மி.லி., யுடன் நிறுத்த முடியாது. பெண்கள் பீர் குடிக்கலாம். அதில் தீங்கு அதிகம் இல்லை என்ற கருத்தும் அபத்தமானது. கா;ப்பத்தின் போது 'ஒரு துளி மதுவும், குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

சாதாரண மனிதரா? போதை மனிதரா?

சாதாரண மனிதரா? போதை மனிதரா?
எப்படி தெரிந்துக்கொள்வது, அறிகுறிகள் எவைகள்,
என்பது பற்றி உங்களுக்குத் தெரியுமா?

இப்பழக்கத்தில் உள்ளவர்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். எப்படி? படியுங்கள்.
1.    விளையாட்டுகளிலும், அன்றாட வேலைகளிலும் அக்கறை செலுத்தாமல் இருப்பார்கள்.
2.    சரியாக சாப்பிட மாட்டார்கள். அதன் காரணமாக எடை குறைந்து மெல்லிய தேகத்துடன் இருப்பார்கள்.
3.    அதிக கைகால் நடுக்கத்துடனும், தள்ளாடிய நடையும், தடுமாறிய நிலையிலேயே இருப்பார்கள்.
4.    உடைகளில் ரத்தக்கறைகள் காணப்படும்.
5.    கண்கள் சிவந்த நிலையிலும், வீங்கியும், பார்வை திறன் மங்கியும், பேசும்போது குளறிக்குளறிப் பேசுவார்கள்.
6.    புதிதாக நிறைய ஊசி போட்ட தழும்புகள் காணப்படும். இதன் காரணமாகவே உடைகளில் ரத்தக்கறைகள்   படிந்திருக்கும்.
7.    வீட்டில்  ஊசிகள், சிரிஞ்சுகள், வினோதமான பலவகைப் பொட்டலங்கள் நிறைய இருக்கும்.
8.    குமட்டல், வாந்தி, வலி ஏற்பட்ட நிலையில் இருப்பர்.
9.    எந்த நேரமும் தூங்கிக்கொண்டு இருப்பர். அல்லது தூக்கமேயின்றி சுற்றிக்கொண்டிருப்பர்.
10.    தீவிரமான பரபரப்பு காட்டுதல், இல்லையென்றால் சோர்ந்து போய் இருத்தல், நிறைய வியர்த்துக்கொட்டுதல், மனநிலை அடி    க்கடி மாறுதலுடன் காணப்படுவார்கள்.
11.    எதிலும் பற்றற்று இருத்தல், அக்கரையில்லாமலும் இருப்பார்கள்.
12.    கோபத்தில் அடிக்கடி கொதிக்கும் நிலை உண்டாதல்.
13.    நிறைய ஞாபக மறதியுடன், கவனக்குறைவுடனும் இருப்பார்கள்.
14. தனிமையுடன் இருக்கவே அதிகம் விரும்புவார்கள். குறிப்பாக கழிவறையில் நீண்ட நேரம் இருப்பார்கள்.
15.    வீட்டிலிருந்து சிறு சிறு பொருட்களும், பணமும் காணாமல் போதல்.

ஒருவரிடம் இத்தகைய அறிகுறிகள், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து தெரிந்தால் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர்தான் என்பதை உறுதிசெய்து கொள்ளலாம். போதைப்பழக்கத்தால் மனிதனின் நிலை எப்படி எல்லாம் தடம்மாறி விடுகிறது பார்த்தீர்களா? போதைப்பழக்கத்தை தவிர்த்து வாழ்வதுதான் நல்லது. இந்த தீய பழக்கத்தை மறந்து வாழ்வீ
ர்கள் என்ற நம்பிக்கையுடன்...