வியாழன், 29 நவம்பர், 2012

உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி சிகரெட்தான் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிவுறுத்துகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

     இன்றைய நாகரிக உலகில் அதிகமான உயிர்களை பலி வாங்கும் மிகப்பெரிய கொலைக்கருவி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும் என்பதை உலக நல்வாழ்வு அமைப்பின் தகவல்கள்.

    புகையிலைப் பொருட்கள் அவற்றை பயன்படுத்துவோரில் பாதியளவு மரணத்தில் கொண்டு விடுகிறது.  இத்தகையவர்களின் ஆயுட்காலமும் சராசரியாக பாதியளவு குறைந்துவிடுகின்றது. இன்றைய உலகில் 100 கோடி பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றால், அவர்களின் 5 கோடி பேர்கள் அகால மரணத்தால் இறந்துவிடுகின்றனர்.  அதற்கு முழுக்காரணமும் புகையிலையே என்கிறது உலக நலவாழ்வு அமைப்பு தற்போது உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் 54 லட்சம் பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலேயே மரணம் அடைகின்றனர்.  இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 லட்சமாக அதிகரித்துவிடும் என்கீளீ; கணிக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் காவு வாங்குகின்றன.  அதாவது ஒவ்வொரு நாளும் 2500 பேருக்கு மேல் இக்கொடிய பழக்கத்தில் உரிய வயதாகும் முன்பே இறந்து போகின்றனர்.

    உயிர்பலி வாங்கும் இத்தகையை கொடிய பழக்கத்தை நீங்கள் தொடர வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்! இனி வேண்டாமே புகையிலை பழக்கம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்!

2 கருத்துகள்:

  1. நிச்சயமாய் புகை பழக்கத்தை விட்டொழிப்பேன்.இது ஒன்றுதான் எனக்கு கெட்ட பழக்கம், இருந்தாலும் இது தான் தலையாய உயிர்க்கொல்லி கெட்ட பழக்கம் என இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.இன்றோடு 5 நாள் ஆகிறது சிகரெட்டை நிறுத்தி..

    பதிலளிநீக்கு
  2. நிச்சயமாய் புகை பழக்கத்தை விட்டொழிப்பேன்.இது ஒன்றுதான் எனக்கு கெட்ட பழக்கம், இருந்தாலும் இது தான் தலையாய உயிர்க்கொல்லி கெட்ட பழக்கம் என இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்.இன்றோடு 5 நாள் ஆகிறது சிகரெட்டை நிறுத்தி..

    பதிலளிநீக்கு