வெள்ளி, 30 நவம்பர், 2012

உங்கள் வருங்காலத்தை உருவாக்குவதற்குத்தான்

உங்கள் வருங்காலத்தை உருவாக்குவதற்குத்தான் உங்களுக்கு அறிவு அளிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் வல்லமையையும் திறனையும் மேம்படுத்துதான் அதுதான் முன்னேற்றம்.

    வாழ்க்கை என்பது வேலியில்லாத திறந்த வெளி,
        வேண்டிய மட்டும் அதில் நிரப்பிக் கொள்ளுங்கள்.

உங்களை சுற்றி இருக்கும் உலகம் உங்களை நகலெடுக்க துவங்கிவிடும் அப்போது, நகலெடுக்கத் தகுதி வாய்ந்த ஒரு சிறந்த முன் மாதிhpயாக நீங்க்ள இருக்க வேண்டியது அவசியம்.

நம் குழந்தைகள் நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்கிறாh;கள். தாயின் கேட்பதக் காட்டிலும் தங்களை பாh;ப்பதிலிருந்து அவா;கள் அதிகம் கற்றுக் கொள்கின்றனா;. ஒழுக்க நெறிகள் புத்தகங்களில் இருந்து கற்றுக் கொள்ளபடுவதில்லை. மாறாக அவை, நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவா;களிடமிருந்து கற்றுக் கொள்ளபடுகின்றன. உலகம் உங்கள் எடுத்துக் காட்டைதான் பின்பற்றும், உங்கள் அறிவுரையை அல்ல, நமக்கென்று ஒரு சமூகப்பொறுப்பு உள்ளது. ஓh; ஒப்பற்ற முன் மாதிhpயாக நாம் இருக்க வேண்டும். எது செய்யபட வேண்டுமோ அதை செய்யுங்கள்  எது செய்யப்படக்கூடாதோ அதைச் செய்யாதீh;கள். எல்லோரும் பாh;க்கிறாh;க்ள என்ற நினைப்பால் வாழுங்கள்.
வாழ்வீh;கள் என்ற நம்பிக்கையுடன்...

வியாழன், 29 நவம்பர், 2012

புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

புகைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகள் என்ன?

புகைப்பழக்கம் உள்ளிட்ட புகையிலைப் பழக்கத்தால் இதயம், உடலின் ரத்தக் குழாய்கள், நுரையீரல் உட்பட பல உறுப்புகளில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை மக்கள் உணா;ந்து புகை பிடிக்காமல் இருப்பதே நல்லது. மேலும் தாங்கள் புகை பிடிப்பதால் அருகில் இருக்கும் தமது குடும்ப உறுப்பினா; அல்லது நண்பரும் பாதிக்கப்படுகிறாh; என்பதை அனைவரும் உணர வேண்டும். புகைப்பழக்கம் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படுவோhpன் எண்ணிக்கை அதிகாpத்து வருவதே இதற்கு சான்று.

இ சிகரெட் மாற்றா... ஏமாற்றா ?

'பாh;க், பீச், ரயில், பஸ், திரையரங்கு... எனப் பொது இடங்களில் எங்குவேண்டுமானாலும் எங்கள் நிறுவனத்தின் சிகரெட்டைப் புகைக்கலாம். நெருப்பு இல்லை, சாம்பல் இல்லை அதிக அளவில் புகை இல்லை. சிகரெட் பிடித்து முடித்ததும் சட்டைப் பையில் போட்டு எடுத்தும் செல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இது உங்கள் உடல் ஆரோக்கியத்துக்குப் பாதகம் ஏற்படுத்தாத சிகரெட்.

இ-சிகரெட் நிறுவனங்களின் ஈh;ப்பு அழைப்பு இது.

அது என்ன இ-சிகரெட் ? புகை பிடிக்கும் பழக்கத்துக்கு மாற்றாக, புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீண்டு வெளியே வர கண்டுபிடிக்கப்பட்டதுதான் எலெக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட்  என்கிறாh;கள்.

உண்மையிலேயே புகை பிடிக்கும் பழக்கத்துக்கு நல்லதொரு மாற்றுதானா இ-சிகரெட் ? இதனால் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட முடியுமா? இவா;கள் சொல்வதுபோல இதனால் உடல் நலத்துக்கு எந்தத் தீங்கும் இல்லையா?

”பாh;பதற்கு சிகரெட்டைப் போலவே இருக்கும் இதன் உள்ளே நிகோடின் மற்றும் புரோபைலீன் கிளைக்கால் திரவம் நிரப்பப் பட்ட காh;டேஜ், அதைச் சூடுபடுத்த சிறிய கருவி மற்றும் பேட்டாp ஆகியவை இருக்கும்.

    சிகரெட் பிடிக்க நினைக்கும்போது இதை வாயில் வைத்து உறிந்தால், அதில் இதில் வெளிப்படும் விசையால் பேட்டாp இயங்க தொடங்கும். அப்போது நிகோடின் சூடேற்றப்படும். உடனே நிகோடின் புகை மாறும். உண்மையான சிகரெட் பிடிக்கும்போது நிகோடின் உடன் தாh; உள்ளிட்ட ஆயிரக்கணக்கான நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செல்லும். ஆனால், இ-சிகரெட் பிடிக்கும்போது நிகோடின் மட்டுனே உடலினுள் செல்கிறது. இ-சிகரெட் பாட்டாpயை நாம் அவ்வப்போது hP-சாh;ஜ் செய்துகொள்ள முடியும்.

    உண்மையான சிகரெட்போல இதை பற்றவைக்கவும் தேவை இல்லை இ-சிகரெட்டின் முன்பக்கத்தில்உள்ள சிவப்பு விளக்கு, சிகரெட்டின் நெருப்புதணல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்று இ-சிகரெட்டை புகைத்துக் காட்டினாh;கள் சிலா;.

    சென்னையில் இ-சிகரெட் விற்பனை செய்யும் பிரபல நிறுவனம்; 'இங்கே விற்பனை செய்யப்படும் சிகரெட்டுகள் பெரும்பாலும் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. புகையிலையினால் தயாரான சிகரெட்டைப் புகைப்பதன் மூலம் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப் பொருட்கள் ஒரே சமயத்தில் உடலுக்குள் செல்கின்றன. அதில் நிகோடினும் ஒன்று. இந்த இ-சிகரெட்டில் புகை பிடிப்பது போன்ற உணா;வை ஏற்படுத்துவதற்காக நிகோடின் மட்டுமே சோ;க்கப்பட்டுஉள்ளது. இ-சிகரெட்டைப் பிடிக்கும்போது அதில் இருந்து நிகோடின் புகை கிளம்பும். புகைப்பவா; அதை உள் இழுப்பா;. இதனால், புகை பிடித்தது போன்ற திருப்தி ஏற்படும். இந்த நிகோடின் புகை மிக வேகமாகக் கரைந்து விடும். இதனால் அருகில் இருப்பவா;களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை;. ஆனால், இதைப் புகைப்பவா;களுக்கு முற்றிலும் பாதிப்பு இல்லை என்று கூற முடியாது. சாதாரண சிகரெட் புகைப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளைவிடவும் இ-சிகரெட்டில் பாதிப்புக் குறைவு என்று கூறலாம். புகையிலையால் தயாரான சிகரெட்டைப் புகைப்பதை வழக்கமாக வைத்திருந்த பலரும் இ-சிகரெட் புகைக்க ஆரம்பித்த பிறகு, புகையிலை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தையே விட்டுவிட்டனா;.” என்கிறாh;.

    புகையிலையால் ஆன சிகரெட்டைவிடப் புற்றுநோயை உண்டாக்கும் காரணிகள் இதில் குறைவாக உள்ளன எந்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் இ-சிகரெட் தீங்கற்றது என்று கூறிவிட முடியாது.

உலகின் மிகப்பெரிய உயிர்க்கொல்லி சிகரெட்தான் என்று உலக நலவாழ்வு அமைப்பு அறிவுறுத்துகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

     இன்றைய நாகரிக உலகில் அதிகமான உயிர்களை பலி வாங்கும் மிகப்பெரிய கொலைக்கருவி சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பித்தான் ஆகவேண்டும் என்பதை உலக நல்வாழ்வு அமைப்பின் தகவல்கள்.

    புகையிலைப் பொருட்கள் அவற்றை பயன்படுத்துவோரில் பாதியளவு மரணத்தில் கொண்டு விடுகிறது.  இத்தகையவர்களின் ஆயுட்காலமும் சராசரியாக பாதியளவு குறைந்துவிடுகின்றது. இன்றைய உலகில் 100 கோடி பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றால், அவர்களின் 5 கோடி பேர்கள் அகால மரணத்தால் இறந்துவிடுகின்றனர்.  அதற்கு முழுக்காரணமும் புகையிலையே என்கிறது உலக நலவாழ்வு அமைப்பு தற்போது உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் 54 லட்சம் பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதாலேயே மரணம் அடைகின்றனர்.  இந்த எண்ணிக்கை அடுத்த இருபது ஆண்டுகளில் 80 லட்சமாக அதிகரித்துவிடும் என்கீளீ; கணிக்கப்பட்டுள்ளது.

    நமது நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் காவு வாங்குகின்றன.  அதாவது ஒவ்வொரு நாளும் 2500 பேருக்கு மேல் இக்கொடிய பழக்கத்தில் உரிய வயதாகும் முன்பே இறந்து போகின்றனர்.

    உயிர்பலி வாங்கும் இத்தகையை கொடிய பழக்கத்தை நீங்கள் தொடர வேண்டுமா? சிந்தித்துப் பாருங்கள்! இனி வேண்டாமே புகையிலை பழக்கம் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்!

உலகில் மதுவால் அழிவுள்ள


உலகில் மதுவால் அழிவுள்ள மனிதர்கள் குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. நன்றாக வாழ வேண்டும். மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்ற எண்ணமுடையவர்கள் கண்டிப்பாக மதுவைத் தொடக்கூடாது.

    உடல் ரீதியாக மனாரீதியாக ஒழுக்க ரீதியாக மனிதனிடம் பாதிப்புகளை ஏற்படுத்தி அவனது வாழ்க்கையை அவனது குடும்பத்தினாரின் வாழ்க்கையைச் சீரழித்து, சின்னாபின்னமாக்கக் கூடிய மற்றொரு தீய பழக்கம் மதுக் குடிப்பழக்கம்.

    மது இயற்கையில் உண்டாகிற ஒரு திரவம் அல்ல, அது பதார்தங்கள் கெடுவதால் உண்டாவதாகும்.

    கோதுமை சோளம் ஓட்ஸ், பார்லி, அரிசி, திராட்சை போன்றவற்றிலிருந்து இது தயாரிக்கப்படுகிறது. திராட்சை ரசத்தைப் புளிக்க வைக்கும் ஈஸ்ட் சத்தானது பழத்திலும் தானியங்களிலுமுள்ள மாவையும் சர்க்கரையையும் மதுவாக மாற்றிவிடுகிறது. சண்டை சச்சரவுகள் களவு கற்பழிப்பு போன்ற எல்லாவிதமான கீழ்த்தன்மைச் செயல்களும் குற்றங்களும் மதுவின் தூண்டுதலாலேயே நடைபெறுகின்றன. உடலினுள்ளே தப்பி தவறி ஊடுருவும் நோய்க்கிருமிகளை அழிக்கும் எதிர்ப்புத் தன்மை நமது உடலுக்கு இயல்பாகவே உண்டு. நோயை எதிர்க்கும் இந்த ஆற்றலை மது அழித்து விடுகிறது. இதனால் மது அருந்துபவர்  எளிதில் எந்நோய்க்கும் இரையாவார், மது அருந்துபவரின் மனம் அம்மனிதனை எளிதில் ஒரு மிருகமாக்கி விடும். மனிதத் தன்மை அழிந்து மிருக சக்தி ஏற்படவதால் அவர்களுக்கு நல்லது கெட்டது எதுவும் புரியாது. நாள்தோறும் சிறிது மதுவைக் குடித்து விருபவர்  தனக்கு மதுவால் அதிக தீங்கு நேரவில்லை. தீங்கு நேராது என்று எண்ணி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். ஆனால் அவர்  தனது ஈரல், மூளை, நரம்புகள், சிறுநீரகங்கள், பாலின உறுப்புகள், நுரையீரல்கள், இரைப்பை, ரத்தக் குழாய்கள் ஆகியவற்றின் உட்புறத்தைப் பாதிக்க நேர்ந்தால் இந்த உறுப்புகளெல்லாம் சிறிது சிறிதாகக் கெட்டுவருவதை அறியக்கூடும்.
இனியும் தேவையா இந்த மதுப்பழக்கம் விட்டுவிடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...